முக்கியச் செய்திகள் தமிழகம்

நியாய விலைக் கடைகளில் மக்களைக் கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை

நியாய விலை கடையில் மக்கள் விரும்பும் பொருட்களைத் தவிர்த்து மற்ற பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறைச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடை மற்றும் மக்கள் அங்காடி
கடைகளை மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் சுதன்சு பாண்டே
ஆய்வு செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாரதிநகர் அருகே அமைந்துள்ள மக்கள் அங்காடிக்கு இன்று நேரில் சென்ற மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் கடையில் உள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பொருட்கள் கையிருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுதன்சு பாண்டே, ”கொரோனா நேரத்தில் எப்படி மக்களின் உணவு தேவை பூர்த்தி செய்யப்பட்டது, நியாயவிலைக் கடைகளுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் அளவை எப்படி அதிகரிப்பது குறித்து ராமநாதபுரம், மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் முழுமையான ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் குறைந்த மழைப்பொழிவு பெறும் மாவட்டம் என்பதால் இந்த
மாவட்டத்தில் அத்தியாவசிய உணவுப் பொருள் உற்பத்தி குறைந்த அளவில் உள்ளது. எனவே நியாய விலை கடைகள் மற்றும் மக்கள் அங்காடிகளில் பொது மக்களுக்கு
விநியோகிக்கப்படும் பொருட்களின் தரம் மற்றும் கையிருப்பு குறித்து ஆய்வு
செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வின் அடிப்படையில்
கூட்டுறவு கடைகள் மற்றும் நியாயவிலைக் கடைகளில் மக்களுக்கு போதுமான அளவு
அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நியாய விலை கடைகளில் விற்பனை செய்யும் பொருட்கள் அனைத்தும் தரமான, மானிய விலையில் மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்திய அரசு சார்பில் மக்களுக்கு தேவையான கோதுமை, அரிசி, பருப்பு மற்றும்
சர்க்கரை ஆகிய நான்கு முக்கிய அத்தியாவசிய உணவு பொருட்கள் நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மாநில அரசு சார்பில் பாமாயில், பருப்பு, உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

நியாயவிலைக் கடைகளில் மக்கள் விரும்பும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை மட்டும் விற்பனை செய்ய வேண்டும், விருப்பம் இல்லாத பொருட்களை வாங்க மக்களை கட்டாயப்படுத்தினால் ஊழியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். நியாய விலை கடைகளில் மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் மற்றும் குறைகள் குறித்து 1967 என்ற என்னைத் தொடர்பு கொண்டு மக்கள் புகார் அளிக்கலாம். மக்களின் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆளுநர் பேச்சு கண்டனத்திற்குரியது; வைகோ, டிடிவி தினகரன் கருத்து

Arivazhagan Chinnasamy

இந்திய கொரோனா இன்றைய நிலவரம்: தீவிரப்படுத்தப்படும் கொரோனா தடுப்பூசி

நீட் தேர்வில் விலக்கு பெறுவதுதான் அரசின் கொள்கை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

Web Editor