முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

நெட்டிசன்கள் பிடியில் சிக்கிக்கொண்ட ஆதி புருஷ் – பிரபாஸின் புதிய படத்திற்கு எழுந்துள்ள சிக்கல் என்ன ?

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடிகர் பிரபாஸின் ஆதி புருஷ் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நெட்டிசன்கள் பிடியில் சிக்கிக்கொண்டுள்ளது.

 

பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ஆதி புருஷ். இதில் பாகுபலி படப் புகழ் நடிகர்
பிரபாஸ் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் சயீப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்ட
பலர் நடித்திருக்கிறார்கள்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

ராமாயணத்தை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோஃபைல்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் பூஷன் குமார்,
கிருஷன் குமார், ஓம் ராவத், பிரசாத் சுடர், ராஜேஷ் நாயர் ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள். ஆதி புருஷ் திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகி இருக்கிறது. படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஆதி புருஷ் படத்தின் டீசர் மற்றும் பிரம்மாண்டமான போஸ்டர் வெளியாகியுள்ளது.

 

 

ராமர் பிறந்த இடமாக கருதப்படும் அயோத்தி மாநகரில் உள்ள சரயு நதிக்கரையில், பிரம்மாண்டமான ஒலி ஒளி அமைத்து லேசர் விளக்குகள் மற்றும் வான வேடிக்கைகளுடன் படத்தின் டீசரையும், போஸ்டரையும் படகுழு வெளியிட்டது. தற்போது இந்த படத்தின் டீஸர் தான் நெட்டிசன்கள் பிடியில் சிக்கிக்கொண்டுள்ளது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசரை பார்த்த ரசிகர்கள் அதை டிரால் செய்து வருகின்றனர்.

பார்பதற்கு கார்ட்டூன் கதாப்பாத்திரங்கள் போல இருப்பதாகவும் கிராபிக்ஸ் காட்சிகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை எனவும் கிண்டல் செய்து வருகின்றனர். அதே நேரத்தில் ஆதி புருஷ் டீசரை விட பழைய கார்ட்டூன் ராமாயணமே சிறப்பாக இருப்பதாக ஒப்பீடு செய்து வரும் நெட்டிசன்கள், பல்வேறு மீம்களை பகிர்ந்து கிண்டல் செய்து வருகின்றனர். பாகுபலி பிரபாசா இப்படி உள்ளார் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

அதே நேரத்தில் ராமாயணத்தை இழுவு படுத்தி விட்டதாகவும் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் எனவும் சிலர் பதிவு செய்து வருகின்றனர். நெட்டிசன்கள் கிண்டல் ஒரு புறம் இருந்தாலும் மற்றொருபுறம் இந்த டீசருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. ராமாயண காவியத்தை தற்போதைய இணைய தலைமுறை ரசிகர்களும் ரசிக்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆதி புருஷ் தயாராகி இருப்பதாக படகுழு தெரிவித்துள்ளனர். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி ஐமேக்ஸ் மற்றும் 3டி வடிவில் இந்த படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

– தினேஷ் உதய்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சென்னை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் – முழு விவரம் இதோ!

EZHILARASAN D

மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Jayasheeba

தமிழகத்தில் 9 பேருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா: மத்திய சுகாதாரத்துறை