கார், இருசக்கர வாகனங்களில் வருவோரை துரத்தும் தெரு நாய்கள்…

இரவு நேரத்தில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வருவோரை துரத்தும் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  சென்னை அம்பத்தூர் 7 வது மண்டலத்துக்கு உட்பட்ட 88…

இரவு நேரத்தில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வருவோரை துரத்தும் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

சென்னை அம்பத்தூர் 7 வது மண்டலத்துக்கு உட்பட்ட 88 வது வார்டு அண்ணா நகர், பார்க்
ரோடு, AP பிளாக், 1 வது தெரு முதல் 6 வது தெரு வரை தெரு நாய்கள் அட்டகாசம்
செய்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.  கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் சீட்டுகளை இரவு நேரத்தில் கடித்து குதறுவதாகவும்,  இரவு நேரத்தில் நடமாட அச்சமாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

தெருவுக்குள் நுழைந்தாலே துரத்தி துரத்தி கடிப்பதாகவும் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை யாரும் அந்த தெருவுக்கு செல்ல முடியாமல் தவித்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.  அப்பகுதி நாய்களின் கூடாரமாக திகழ்கிறது என்றும் அப்பகுதி மக்கள்
கூறுகின்றனர்.  உடனடியாக சம்பந்தப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-7 (அம்பத்தூர்)அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த தெரு நாய்களை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள்  வேண்டுகோள் வைத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.