விவாகரத்து ஆன பின்னர் அதற்காக பிரத்யேகமாக போட்டோசூட் நடத்திய பெண்ணின் படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
90களின் தொடக்கத்தில் நடந்த திருமணங்களில் புதிதாக கேமராக்களும், வீடியோ கவரேஜ்களும் துவங்கின. கேமராவின் மேல் மஞ்சள் விளக்கினை ஒளிரவிட்டு படங்கள் மற்றும் வீடியோவை மொத்தமாக எடுத்து முடித்து விடுவார்கள். அதன் பின்னர் பல கிராஃபிக் வேலைகள் செய்து தாஜ் மஹாலுக்குள்ளிருந்து மணமக்களில் படங்களை வரச் செய்வது மற்றும் ஹார்ட்டின் சிம்பலில் இருவரது படங்களை வரச் செய்வது போன்ற எடிட்டிங்களை செய்து அதற்கு தகுந்தாற்போல் தமிழ் சினிமா பாடல்களை சேர்த்து ஒளி ஒலி தட்டுக்களாக தருவார்கள்.
தற்போது உலகம் தொழில்நுட்பத்தில் அசாத்தியமான சாதனைகளை படைத்து வருகிறது. விதமான கேமராக்கள், வித விதமான போட்டோசூட்கள் என பல போட்டோசூட்களை நிகழ்த்தி வருகின்றனர். திருமணத்திற்கு முன், திருமணத்திற்கு பின், குழந்தை பிறக்கும் முன், பிறந்த பின், பிறந்த நாள், நிச்சயதார்த்தம், என புது புது போட்டோ சூட்டுகள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன.
வடக்கு கரோலினாவைச் சார்ந்த பெண் ஒருவர் வினோதமாக விவாகரத்து போட்டோசூட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்து அதன் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். புரூக் எனும் பெண்ணுக்கும் இராணுவத்தில் பணிபுரியும் அவரது காதலருக்கும் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமண வாழ்க்கை சுமுகமாக அமையவில்லை.
எனவே தம்பதிகள் இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற முடிவெடுத்து கடந்த 2021ம் ஆண்டு நீதிமன்றத்தை நாடினர். சட்ட நடிவடிக்கைகள் முடிந்த நிலையில் இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இராணுவ வீரருடன் குடும்பம் நடத்துவது மிகவும் கடினமான ஒன்று என தெரிவித்த அவர் விவாகரத்து பெற்ற நிகழ்வை போட்டோசூட்டாக எடுக்க முடிவெடுத்தார்./
இதன் படி பிரத்யேகமாக புகைப்பட கலைஞர்களை அழைத்து போட்டோசூட்டை நடத்தினர். அதில் தனது திருமண உடையை எரிப்பது போன்றும், திருமண படங்களை உடைப்பது போதும் படம் பிடித்துள்ளனர். எத்தனையோ போட்டோசூட்கள் இருக்க விவாகரத்து போட்டோசூட் நடத்திய பெண்ணின் படங்கள் இணையத்தின் வைரலாகி வருகின்றன.







