குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் இரண்டாவது நாளாகச் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகள் உள்ளன. கடந்த சில நாட்களாக சீசன் தொடங்கப்பட்ட நிலையிலும் அருவிகள் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாகக் குற்றால அருவிகளான மெயின் அருவி ஐந்தருவி பழைய குற்றாலம் சிற்றருவி புலி அருவி உள்ளிட்ட அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
அண்மைச் செய்தி: ‘காமராஜர் பிறந்தநாள் விழா; அவரின் ஆட்சிக்காலத்தின் சிறப்புகள் என்ன?’
இதனால் நேற்று சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. இரண்டாவது நாளாக இன்றும் அருவியில் காட்டாற்று வெள்ளம் தொடர்வதால் அருவிகளில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.








