சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஸ்டீபன் பிளெமிங் விலகல்

சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஸ்டீபன் பிளெமிங் விலகியுள்ளார்.

சென்னை அணியின் பயிற்சியாளராக பணியாற்றி வருபவர் ஸ்டீபன் பிளெமிங். நியூசிலாந்து நாட்டு கிரிக்கெட் வீரரான இவர் சென்னை அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த 2009 ஆம் ஆண்டு ஸ்டீபன் பிளமெங் நியமிக்கபட்டார். முன்னதாக இவர் சென்னை அணியில் வீரராக இருந்தார். இவரது பயிற்சியின் கீழ் சென்னை அணி 12 முறை பிளேஆஃப்களுக்கு முன்னேறியது. மேலும் சென்னை அணி 2010, 2011, 2018, 2021 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை வென்றது. 2010 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் சாம்பியன்ஸ் லீக் இருபது20 (CLT20) கோப்பையையும் வென்று அசத்தியது.

ஆனால் கடந்த சில ஐபிஎல் சீசன்களாக பிளெமிங்கின் பயிற்சியாளர் பொறுப்பு மீது விமர்சனங்கள் எழுந்து வருகிறது. சென்னை அணி அடுத்தடுத்து பிளேஆஃப் சுற்றிற்கு தகுதி பெறாதது இதற்கு காரணமாகும். 2023 ஆம் ஆண்டு சென்னை அணி கோப்பையை வென்றிருந்தாலும் 2024, 2025, 2026 என அடுத்தடுத்து மூன்று சீசன்களாக பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாததது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஸ்டீபன் பிளெமிங் விலகியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், “சூப்பர் கிங்ஸ் அணியும் அதன் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங்கும் பரஸ்பரம் பிரிந்து செல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளத். ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான மற்றும் நீடித்த கூட்டாண்மைகளில் ஒன்றை நாங்கள் இணைந்து பகிர்ந்து கொள்கிறோம். நீங்கள் உருவாக்கிய பாரம்பரியம் எங்களுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும். மிகுந்த மரியாதையுடனும்,💛” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.