மாநில அளவிலான பள்ளி மாணவ மாணவியருக்கான துடுப்பு நீச்சல் போட்டிகள் தேனியில் நடைபெற்றது. இதில் 20 மாவட்டங்களைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு உள்நீச்சல் சங்கத்தின் சார்பாக மாநில அளவிலான மூன்றாவது நீச்சல் போட்டிகள் தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தேனி, மதுரை, சிவகங்கை, திருச்சி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட 20 மாவட்டங்களை சேர்ந்த நீச்சல் பயிற்சி பெற்ற பள்ளி, மாணவ மாணவிகள் இதில் கலந்து கொண்டனர்.
10 வயது முதல் 18 வயது உள்ளவர்களுக்கு 5 பிரிவுகளில் போட்டிகள் நடத்தபட்டன. இந்த போட்டியானது, தலை முழுவதும் நீரில் முழ்கியபடியும், கால்களில் துடுப்பினை அணிந்தவாறும் நீச்சல் அடிக்க வேண்டும். இந்த போட்டியில் நுற்றைம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவியர்களுக்குப் பதக்கங்களும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கபட்டன.
சௌம்யா.மோ
THENI_STATE LEVEL SWIMMING MEET
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.