பெருந்துறையில் மாநில அளவிலான தற்காப்பு போட்டி!

பெருந்துறையை அடுத்துள்ள துடுப்பதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான சீனியர் பென்காக் சிலாட் எனும் தற்காப்பு கலை போட்டி நடைபெற்றது. இரண்டு நாட்களாக நடைபெற்ற இப்போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி உள்பட…

பெருந்துறையை அடுத்துள்ள துடுப்பதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான சீனியர் பென்காக் சிலாட் எனும் தற்காப்பு கலை போட்டி நடைபெற்றது.

இரண்டு நாட்களாக நடைபெற்ற இப்போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி உள்பட 23 மாவட்ட அணிகளை சேர்ந்த 240க்கும் மேற்பட்ட வீரர்‌ மற்றும் வீராங்கணைகள் கலந்து கொண்டனர். இப்போட்டியின் முடிவில் 38 புள்ளிகள் பெற்று கடலூர் அணி முதல் இடத்தையும், 35 புள்ளிகள் பெற்று விழுப்புரம் மாவட்டம் இரண்டாம் இடத்தையும், 32 புள்ளிகள் பெற்று தமிழ்நாடு காவல்துறை அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தது.

இப்போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற அணிகள் வருகின்ற ஜூன் மாதம் மணிப்பூரில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளதாக இந்தியன் பென்காக் சிலாட் சங்கத்தின் நிர்வாகிகள் கூறினர்.

– சே.அறிவுச்செல்வன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.