மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி பயணத்திற்கு அரசு மரியாதை – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

இயக்குநர் மற்றும் நடிகரான பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 73. இதனை தொடர்ந்து திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் தம் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த இயக்குநர் கே.பாக்யராஜின் உடல், சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உறவினர்கள் திரையுலகினர், மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

நாளை (ஜூன் 28) பிற்பகல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழ் நாடு முதலமைச்சர் விஜய், இயக்குநர் பாக்யராஜ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த இரங்கலில் “திரைத்துறையில் திரு. கே.பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.