பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் (73) இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பாக்யராஜின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியில் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் முதலமைச்சர் ஜோசப் விஜய், திமுக தலைவர் மு.கஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே மறைந்த இயக்குநர் பாக்யராஜ் இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இந்நிலையில், மறைந்த இயக்குனர் பாக்யராஜ் உடல் நாளை மதியம் 1.30 மணிக்கு சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. அவரது உடல் நுங்கம்பாக்கம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ஏராளமான திரையுலகினரும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.




