அரிசிக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பை மாநில அரசு ஏற்காது-வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா நம்பிக்கை

அரிசிக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதை மாநில அரசு ஏற்காது என நம்புவதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா ஈரோட்டில்…

அரிசிக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதை மாநில அரசு ஏற்காது என நம்புவதாக
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா
ஈரோட்டில் இன்று பத்திரிகையாளர் சந்திந்தார்.அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் பெரிய வணிக நிறுவனங்களால் சிறு வணிகர்கள் பாதிக்கப்படுகின்றனர். மத்திய அரசு சமீபத்தில் உயர்த்திய ஜிஎஸ்டி வரி உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். அவ்வாறு திரும்பப் பெறவிட்டால் மாநில அளவில் வணிகர்கள் சார்பில் பல்வேறு கட்ட போராட்டம் நடைபெறும்.

தமிழக அரசு செஸ் வரியை திரும்ப வேண்டும். அரிசிக்கு வரி விதிப்பதை மாநில அரசு ஏற்காது என நம்புகிறேன். பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும். மேலும் தமிழக அரசு வணிகர்கள் ரவுடிகளின் தாக்குதலிருந்து காப்பாற்ற தனி டோல்பிரி எண்ணை அறிவித்தற்கு நன்றி என்று விக்கிரமராஜா தெரிவித்தார்.

அரிசி, பருப்புக்கு 5 சதவீத ஜிஎஸ்டி சமீபத்தில் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.