உறியடி விஜய்குமார் நடிக்கும் புதிய படத்தின் படபிடிப்பு தொடங்கியது.

உறியடி 2 திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்குமார் நடிக்கும் புதிய படத்தின் படபிடிப்பு தொடங்கியுள்ளது. ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் விஜய்குமார் நடிக்கிறார். இந்த படத்தை சேத்துமான் புகழ் தமிழ்…

உறியடி 2 திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்குமார் நடிக்கும் புதிய படத்தின் படபிடிப்பு தொடங்கியுள்ளது.

ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் விஜய்குமார் நடிக்கிறார். இந்த படத்தை சேத்துமான் புகழ் தமிழ் இயக்குகிறார். கிராமப்புற பின்னணியில் அரசியல், ஆக்‌ஷன், காதல், கலந்த குடும்ப பாங்கான திரைப்படமாகவும், ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாகவும் உருவாகிறது. இதற்கான படப்பிடிப்பு ஒரே கட்டமாக தொடர்ந்து 60 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். மேலும் திலீபன், பாவெல் நவகீதன், மரியம் ஜார்ஜ் மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர். 96 படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மகேந்திரன் ஜெயராஜூ ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த வஸந்தா இசையமைக்கிறார். CS பிரேம் குமார் எடிட்டராகவும், ஸ்டன்னர் சாம் சண்டை பயிற்சியாளராகவும், ஏழுமலை கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனங்களை எழுதியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.