கலால் வரி குறைப்பால் மாநில அரசு வருவாய் பாதிக்கப்படும்

கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளதன் மூலம் மாநில அரசின் வருவாய் பாதிக்கப்படும் என மார்க்கிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  மதுரையில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்…

கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளதன் மூலம் மாநில அரசின் வருவாய் பாதிக்கப்படும் என மார்க்கிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

மதுரையில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்தியாவில் உள்ள எல்லா மொழியை அங்கீகரிக்கப்பட வேண்டும் என பிரதமர் பேசி உள்ளார்.  இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும். இந்தி மொழிக்கு மட்டுமே மத்திய அரசு முக்கியத்துவம் தருகிறது.

மத்திய அரசு கலால் வரியை குறைத்து பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை குறைப்பில் ஏன் மத்திய அரசு செஸ் வரியை குறைக்கவில்லை. பெட்ரோல், டீசல் விலையில் உள்ள செஸ் வரியை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். கலால் வரி குறைப்பால் மாநில அரசின் வரி வருவாய் பாதிக்கப்படும்.

பட்டினபிரவேஷம் தேவையில்லாத ஒன்று. ஒரு மனிதனை இன்னொரு மனிதன் தூக்க கூடாது. தமிழகத்தில் உள்ள பல ஆதீன மடங்கள் பட்டினபிரவேஷங்கள் கைவிடப்பட்டு உள்ளது. பட்டினபிரவேஷத்தை வைத்து பாஜக அரசியல் செய்கிறது.

பேரறிவாளன் விடுதலையில் காங்கிரஸ் கட்சி தங்களது நியாமான கோரிக்கையை முன் வைக்கிறது. பேரறிவாளன் தீர்ப்பை முன் உதாரணமாக வைத்து நீண்ட காலமாக சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என  தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.