சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது வேளாண் நிதிநிலை அறிக்கை.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 2022-2023ம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் நேற்று நடைபெற்றது. இதனைத் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். காலை 10 மணியளவில் தொடங்கிய பட்ஜெட் அறிவிப்பில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது அறிவிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் தற்போது வேளாண் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யத் தொடங்கினார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம். இதில் விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள் குறித்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வேளாண் சாகுபடியை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும், பாசன வாய்க்கால்களைத் தூர்வார அதிக நிதி ஒதுக்கிடு செய்ய வேண்டும், காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு திட்டத்துக்குக் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் மற்றும் விவசாயிகள் விளைப்பொருட்களை சந்தைப்படுத்தும் முறையை எளிமையாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.