தை அல்ல மாசி, பங்குனி என எந்த மாதம் பிறந்தாலும், திமுகவுக்கும் ஸ்டாலினுக்கும் நல்ல வழி பிறக்காது; அமைச்சர் ஆர்.பி உதயகுமார்

தை மாதம் அல்ல மாசி, பங்குனி என எந்த மாதம் பிறந்தாலும், திமுகவுக்கும் ஸ்டாலினுக்கும் நல்ல வழி பிறக்காது என்று, அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் தெரிவித்துள்ளார். மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி, வரும் 16-ஆம்…

தை மாதம் அல்ல மாசி, பங்குனி என எந்த மாதம் பிறந்தாலும், திமுகவுக்கும் ஸ்டாலினுக்கும் நல்ல வழி பிறக்காது என்று, அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி, வரும் 16-ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இதில், வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி உதயக்குமார், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும், என்று நம்பிக்கை தெரிவித்தார். ஸ்டாலினும், உதயநிதியும் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக, நாகரிகமற்ற அரசியல் செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார். உதயநிதி ஸ்டாலினின் பேச்சு தமிழகத்தில் எடுபடாது, என்றும் ஆர்.பி. உதயக்குமார் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply