பழங்குடியினர் உரிமைகளுக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய ஸ்டேன் ஸ்வாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தினார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் ‘நீதிக்கான திருப்பயணம்’ எனும் பெயரில் ஸ்டேன் ஸ்வாமிக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஸ்டேன் ஸ்வாமியின் உருவப்படத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, தயாநிதிமாறன் மற்றும் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்று ஸ்டேன் ஸ்வாமிக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் இந்த புகழஞ்சலி நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.







