முக்கியச் செய்திகள் குற்றம்

எஸ்எஸ்ஐ உயிரிழப்புக்கு முயன்ற சம்பவம்: எஸ்.பி. புதிய உத்தரவு

ஜேடர்பாளையம் காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ. உயிரிழப்புக்கு முயன்ற சம்பவம் குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விசாரிக்க எஸ்.பி. சாய் சரண் தேஜஸ்வி உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பொத்தனூரைச் சேர்ந்தவர் நீலகண்டன் (50). இவர், ஜேடர்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகின்றார். நீலகண்டன் நேற்று மதியம் காவல் நிலையத்தில் விஷம்  அருந்தி உயிரிழக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதனைப் பார்தது அதிர்ச்சி அடைந்த சக போலீசார் இவரை மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில்
சேர்த்துள்ளார். அங்கு நீலகண்டன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

எஸ்.எஸ்.ஐ. நீலகண்டன் நேற்று உயிரிழப்பு செய்வதற்கு முன்பு தனது செல்போனில்
உயிரிழப்புக்கு காரணமானவர்கள் குறித்து வாக்குமூலமாக வீடியோ ஒன்றை பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அதில், தனது சாவுக்கு பரமத்திவேலூர் DSP ராஜாரணவீரன், ஜேடர்பாளையம் காவல் நிலைய எஸ்ஐ சுப்பிரமணி, தனிப்பிரிவு எஸ்எஸ்ஐ லட்சுமணன் ஆகியோர் காரணம் எனவும், அவர்கள் மீது டிஜிபி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

நீலகண்டன் மூன்று பேர் மீதும் எதற்காக குற்றம்சாட்டுகின்றார் என முழு விபரங்களை
கூறவில்லை. நீலகண்டன் வீடியோ வெளியிட்டுள்ளது போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி, இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சேகரை நியமித்துள்ளார். இதுகுறித்து அவர் விசாரணை நடத்தி வருகின்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இணையத்தில் வைரலாகும் கிச்சானாலே இளிச்சவாயன் தானா சார்?

G SaravanaKumar

ஓராண்டில் மட்டும் 3,425 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு-அமைச்சர் தகவல்

Web Editor

அதிமுக ஆக்சிஜனில் உயிர்வாழ்வது தான் இரண்டாவது இரும்பு மனிதருக்கு அழகா?-முரசொலி கேள்வி

Web Editor