ஸ்ரீபெரும்புதூர் : நுங்கு பறித்த கல்லூரி மாணவர்கள் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

ஸ்ரீபெரும்புதூர் அருகே நுங்கு பறிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சிறுமாங்காடு பகுதியை சேர்ந்தவர்கள் கல்லூரி மாணவர்கள் தட்சணாமூர்த்தி, டில்லிகணேஷ். இவர்கள் இருவரும் சிறுமாங்காடு கிராமத்தில் உள்ள பனை மரத்தில் நுங்கு பறிக்க சென்றுள்ளனர். அப்போது பனங்காய் பறிக்க இரும்பு கம்பியை பயன்படுத்தியபோது, அருகில் சென்ற மின் கம்பியில் உரசியதில் இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தட்சணாமூர்த்தி, டில்லிகணேஷ் ஆகிய இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.