முக்கியச் செய்திகள் உலகம்

இலங்கை பிரதமர் ராஜபக்சே ராஜினாமா ஏன் ?

இலங்கை அதிபர் மாளிகையில் நடைபெற்ற சிறப்பு அமைச்சரவை கூட்டத்தில் தனது பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு, தொடர் மின்தடை என இதுவரை இலங்கை எதிர்கொள்ளாத நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. மக்களும் பல்வேறு இடங்களில் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இரண்டாவது முறையாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அது இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

காலிமுகத்திடலில் ஏற்பட்ட வனமுறையைத்தொடர்ந்து தற்போது போலீசார் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊராடங்கு கொழும்பு தெற்கு,வடக்கு மற்றும் மத்திய இடங்களில் நடைமுறைக்கு வருகிறது. இன்று காலை அரசை ஆதரிப்பவர்கள், பொதுமக்கள் மீது தாக்குதல் முயற்சி மேற்கொண்டனர். போராட்டக்காரர்கள் பகுதிக்கு சென்ற மஹிந்த ஆதரவாளர்கள் அவர்களை தாக்க முயற்சித்தனர். இதனையடுத்து போலீசார் இரு பிரிவினர் மீதும் வஜ்ரா வாகனம் மூலம் தண்ணீர் பீய்ச்சியும், தடியடி நடத்தியும் கலைத்தனர்.

இதில் 23 பேர் காயமடைந்தனர்.  களத்தில் மக்களோடு சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமசாதா மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.  தொடர்ந்து கொழும்பு தலைநகரில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இதற்கிடையே, இன்று காலை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையில் சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அமைச்சர்கள் பலரும் மகிந்த ராஜபக்சேவின் தவறான கொள்கைகளால்தான் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளதாக தெரிகிறது. அதற்கு பதில் அளித்த மகிந்த ராஜபக்சே தம்முடைய பதவி விலகலால் நாட்டிற்கு நல்லது நடக்கும் என்றால் பதவி விலக தயார் எனக் கூறியதாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அழுத்தம் காரணமாக பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார். இதனை இலங்கை மக்கள் வரவேற்றுள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை!

Vandhana

நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடர் ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெறுகிறது

Halley Karthik

சென்னையை அச்சுறுத்தும் காற்று மாசு

Halley Karthik