முக்கியச் செய்திகள் குற்றம்

இலங்கை கடற்படையால் ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மின் பிடித்ததாக கூறி, ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்பபட்குகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை மீன் பிடிக்கவிடாமல் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர், அவர்களின் விசைப்படகையும் கைப்பற்றிச் சென்றுள்ளனர்.

அண்மைச் செய்தி: ‘அரசுப் பேருந்தில் பெண் வழக்கறிஞரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் கைது’

கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலட்டி கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 15-ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமலாகவுள்ள நிலையில், இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கை தமிழ்நாட்டு மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Advertisement:
SHARE

Related posts

ரூ.500 கோடி மதிப்பு கோயில் நிலங்கள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

Ezhilarasan

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி: இந்திய அணிக்கு 288 ரன்கள் இலக்கு

Arivazhagan CM

தொடர் மழை எதிரொலி; 59 விமானங்கள் தாமதம்

Ezhilarasan