முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஹெட்மயர் போராடியும் முடியலை: இலங்கையிடம் பணிந்தது வெஸ்ட் இண்டீஸ்

டி-20 உலகக் கோப்பைத் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்தப் போட்டியில், இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.

டி- 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த 35 வது லீக் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் – இலங்கை அணிகள் மோதின.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட், பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக நிசாங்காவும் குசால் பெரேராவும் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடினர். 21 பந்துகளில் 29 ரன்கள் எடுத்த நிலையில் பெரேரா விக்கெட்டை எடுத்தார் ரஸல். அடுத்து நிசாங்காவுடன், சரித் அசலங்கா இணைந்தார்.

வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை பிரித்து மேய்ந்த இவர்கள் இருவரும் அரைசதம் கடந்தனர். நிசாங்க் 51 ரன்கள் எடுத்த நிலையிலும் அசலங்கா 68 ரன்கள் விலாசிய நிலையிலும் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி, 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது . ஷனகா 14 பந்துகளில் 25 ரன்களுடனும், கருணாரத்னே 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரஸல் 2 விக்கெட்டுகளும் பிராவோ ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். பின்னர் 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. இலங்கை அணியின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி வீரர்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணியால், 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் பூரன் 34 பந்துகளில் 46 ரன்களும் ஹெட்மயர், 54 பந்துகளில் 4 சிக்சர், 8 பவுண்டரியுடன் 81 ரன்களுடன் எடுத்தனர். மற்ற யாரும் நிலைத்து நிற்காததால், அந்த அணி தோல்வியைத் தழுவியது.

இலங்கை அணி சார்பில் அவிஷ்கா பெர்னாண்டோ, கருணாரத்ன, வனிந்து ஹசரங்கா தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். துஷ்மந்த சமீரா, தசுன் ஷனகா தலா ஒரு விக்கெட்கள் எடுத்தனர்.

Advertisement:
SHARE

Related posts

ஐபிஎல் தொடரில் புதிய அணிகள் : இன்று அறிவிப்பு

Halley karthi

அண்ணா பல்கலைக் கழகத்தை நிர்வகிக்க குழு!

Ezhilarasan

அல்லிகுண்டம் மலையில் காட்டுத் தீ : சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை

Halley karthi