முக்கியச் செய்திகள் இந்தியா வணிகம்

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைப்பு

மத்திய அரசின் வரி குறைப்பு அறிவிப்பைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வாட் (VAT) வரியைக் குறைத்துள்ளன.

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டிய நிலையில், தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 10 ரூபாயும் குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. பெட்ரோலியப் பொருட்கள் மீதான மதிப்புக் கூட்டு வரியை குறைக்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறுவுறுத்தி இருந்தது. அதனை ஏற்று, பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்கள் உட்பட பல்வேறு மாநிலங்களில் வாட் வரி அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து புதுச்சேரியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 ரூபாய் 85 காசுகளும், டீசல் விலை 19 ரூபாயும் குறைந்துள்ளது. பாஜக ஆளும் கர்நாடகா, கோவா, குஜராத், அசாம், மிசோரம் மாநிலங்களில் பெட்ரோல் விலை 12 ரூபாயும், டீசல் விலை 17 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. இதே போல், திரிபுரா, மணிப்பூர், சிக்கிம், இமாச்சல் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரிலும் பெட்ரோல் விலை 12 ரூபாயும், டீசல் விலை 17 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தலா 12 ரூபாய் குறைக்கப்படுவதாக அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளன. மத்தியப் பிரதேசத்தில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி 4 சதவீதம் குறைக்கப்படுவதாக முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் அறிவித்துள்ளார்.

அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் பெட்ரோல் லிட்டருக்கு 10 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 15 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. இதே போல், உத்தரகாண்ட் மாநிலத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் குறைந்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் பெட்ரோல் விலை 8 ரூபாயும், டீசல் விலை 13 ரூபாயும் குறைக்கப்படுவதாக முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

இதே போல், பீகார் மாநிலத்தில் பெட்ரோல் விலை 8 ரூபாய் 20 காசுகளும், டீசல் விலை 13 ரூபாய் 90 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

கணவனை அடித்து கொலை செய்த மனைவி!

Jeba Arul Robinson

திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கொரோனா தொற்று உறுதி!

Saravana Kumar

தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Halley karthi