#EmergingAsiaCup2024 | இலங்கையை வீழ்த்தி கோப்பை வென்று சாதனை படைத்தது ஆப்கானிஸ்தான்!

எமர்ஜிங் டி20 ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி கோப்பை வென்று ஆப்கானிஸ்தான் அணி வரலாறு படைத்துள்ளது. வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை 2024 (எமர்ஜிங் ஆசிய கோப்பை) டி20 கிரிக்கெட் தொடர்…

Sri Lanka , Afghanistan ,Emerging Teams Asia Cup 2024 Final,Emerging Teams Asia Cup

எமர்ஜிங் டி20 ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி கோப்பை வென்று ஆப்கானிஸ்தான் அணி வரலாறு படைத்துள்ளது.

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை 2024 (எமர்ஜிங் ஆசிய கோப்பை) டி20 கிரிக்கெட் தொடர் ஓமனில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 8 அணிகளில் இருந்து குரூப் ஏ-வில் இருந்து இலங்கை ஏ, ஆப்கானிஸ்தான் ஏ அணியும், குரூப் பி-யில் இருந்து இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ அணியும் அரையிறுதிக்கு முன்னேறின. வங்காளதேசம் ஏ, ஹாங்காங், யு.ஏ.இ., ஓமன் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.

இந்த தொடரின் அரையிறுதி ஆட்டங்களில் பாகிஸ்தான் ஏ அணியை வீழ்த்தி இலங்கை ஏ அணியும், இந்தியா ஏ அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் ஏ அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில், இலங்கை ஏ, ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நேற்று அல் அமேரத்தில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்தது. அதில் அதிகபட்சமாக சஹன் ஆராசிகே 64 ரன்கள் எடுத்தார்.

இதையும் படியுங்கள் : “தவெகவின் திராவிடமும், தமிழ் தேசியமும் என்ற கொள்கை நாதக கொள்கைக்கு எதிரானது” – #Seeman பேட்டி!

இதையடுத்து, 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 18.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றதுடன், எமர்ஜிங் ஆசிய கோப்பையையும் வென்று அசத்தியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.