பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், இந்தி படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த். இவர் சூதாட்டப் புகாரில் சிக்கியதை அடுத்து, இந்திய கிரிக்கெட் வாரியம் அவருக்கு வாழ்நாள் தடை விதித்தது. இதை எதிர்த்து ஸ்ரீசாந்த் வழக்குத் தொடர்ந்தார். சில வருடங்களுக்கு முன், உச்சநீதிமன்றம் அவருக்கான தடையை நீக்கியது. இதையடுத்து, உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் அவர் சினிமாவிலும் நடித்து வருகிறார். இந்தியில், அக்சர் 2, காபரே, மலையாளத்தில் டீம் 5, கன்னடத்தில் கெம்பே கவுடா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஸ்ரீசாந்த், ’பட்டா’ என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். இதை ஆர்.ராதாகிருஷ்ணன் இயக்குகிறார்.
அரசியல் த்ரில்லர் படமான இதில், ஸ்ரீசாந்த், சிபிஐ அதிகாரியாக நடிக்கிறார். இந்த கேரக்டருக்கு அவர்தான் சரியானவராக எனக்குத் தோன்றியது. கதையை கேட்டதும் கண்டிப்பாக நடிக்கிறேன் என்றார். இந்தக் கேரக்டரில் அவரால் சிறப்பாக நடிக்க முடியும் என்கிறார் இயக்குநர் ராதாகிருஷ்ணன்.
சுரேஷ் பீட்டர்ஸ் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு பிரகாஷ் குட்டி ஒளிப்பதிவு செய்கிறார். ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் படப்பிடிப்பை தொடங்கயிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.