முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

160 கோடியாக அதிகரித்த குழந்தை தொழிலாளர்கள்!


எல்.ரேணுகாதேவி

“கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை” எனப் பாடினார் ஔவையார். அந்த கொடுமையின் உச்சம்தான் இந்த 2021-ம் ஆண்டிலும் தொடர்கிறது என்பதற்கான சாட்சிதான் கடந்த 10 ஆண்டுகளில் 160 கோடியாக உயர்ந்துள்ள குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை.

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் ஜூன் 12-ம் தேதி (இன்று) உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) மற்றும் ஐ.நா சபையின் சார்பில் குழந்தை தொழிலாளர்களின் நிலை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

4 ஆண்டுகளில் 84 லட்சம் குழந்தை தொழிலாளர்கள்

அதில், உலகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை 160 கோடியாக உயர்ந்துள்ளது என்றும் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 84 லட்சம் குழந்தைகள் ‘குழந்தை தொழிலாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான நடவடிக்கை கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக ஸ்தம்பித்துள்ளது என்கிறது அந்த அறிக்கை. 160 கோடி குழந்தை தொழிலாளர்களில் 5 முதல் 11 வயதுள்ள குழந்தைகள் எண்ணிக்கை மட்டும் சரிபாதியாகும். அதேபோல் அபாயகரமான வேலை சூழலில் இருக்கும் 5 முதல் 17 வயதுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 65 லட்சத்திலிருந்து 79 கோடியாக அதிகரித்துள்ளது.

இது குறித்து பேசிய சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இயக்குநர் கய் ரைட்டர்,“குழந்தை தொழிலாளர்களின் இந்த எண்ணிக்கை என்பது ஒரு எச்சரிக்கை மணி. அதனைப் பார்த்துக்கொண்டு நாம் அமைதியாக இருக்கமுடியாது. குழந்தைகள் தொழிலாளர்களாக மாறும் இந்த சூழ்நிலைக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் எதிர்த்து நிற்கவேண்டும்” என கூறியுள்ளார்.

தொழிலாளர்களாக மாறவுள்ள 9 கோடி குழந்தைகள்

ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் வறுமை, வேலையின்மை போன்ற காரணங்களால் 16 கோடி குழந்தைகள் கடந்த 4 ஆண்டுகளில் தொழிலாளர்களாக மாறியுள்ளனர். அதேபோல் ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆபத்தான கட்டத்தை நெருங்கியுள்ளது.

மேலும் அடுத்த 2022-ம் ஆண்டுக்குள் 9 கோடி குழந்தைகள் தொழிலாளர்களாக மாறும் நிலைக்கு தள்ளப்படவுள்ளனர். இந்த ஆபத்திலிருந்து குழந்தைகள் பாதுகாக்கப்படவில்லை என்றால் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை என்பது 46 கோடியாக அதிகரிக்கும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை என்பது விவசாய துறையில் 70 % உள்ளது. 5 முதல் 11 வயதுள்ள குழந்தைகள் 28 % பேர் பள்ளிகளுக்கு செல்லமுடியாமல் உள்ளனர். அதேபோல் 12-14 வயதுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை என்பது 35 % உள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை என்பது ஒரு கோடியாக உள்ளது. அவர்களில் 5.6 கோடி பேர் ஆண் குழந்தைகளாகவும், 4.5 கோடி பேர் பெண் குழந்தைகளாகவும் உள்ளனர். தமிழகத்தில் 28.2 சதவீதமாக இருந்த குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை கொரோனா நோய்த் தொற்று காலத்தில் 79.6 சதவீதமாக அதிகரித்துள்ளதாகக் குழந்தைகள் உழைப்பு எதிர்ப்பு பிரச்சார என்ற அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

கல்விதான் மாற்றுவழி

சாதாரண காலத்திலேயே குழந்தைத் தொழிலாளர்களை வேலை தளங்களிலிருந்து மீட்டு அவர்களுக்கான சிறப்புப் பள்ளிகளுக்கு அனுப்பப்படுவார்கள். அதற்காக மட்டுமே அரசு சிறிதளவு பணம் ஒதுக்கும் வேலையைச் செய்யும். மீட்கப்பட்ட குழந்தை ஒருவருக்கு இவ்வளவு என்ற ஒதுக்கீட்டின்படி அக்குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளிகளை நடத்துவதும் அதில் அவர்களைப் பயிற்றுவித்து பொதுப் பள்ளிக்கு மாற்றுவதையும் தொண்டு நிறுவனங்கள் மூலமே மேற்கொள்ளப்படுகிறது. இதில் பல்வேறு போதாமைகள் இருப்பதைக் களத்தில் செயல்படுபவர்கள் கூறுகின்றனர்.

அரசின் நிதி ஒதுக்கீடும் அதன் மூலம் நடத்தப்படும் இந்தச் சிறப்புப் பள்ளிகளும் குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டவர்களை மையப்படுத்தப்பட்டவையே. உண்மையில் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டியது குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகும் நிலையை மாற்றுவதாகும். ஆனால், அதற்கான திட்டமிடல்கள் நம் நாட்டில் மிகக்குறைவேயாகும்.

கல்விக்கான நிதியைக் கூடுதலாக ஒதுக்கி, அனைவருக்குமான இலவசக் கட்டாயக் கல்வியை உளப்பூர்வமான வகையில் வழங்குவதை அரசு உத்தரவாதப்படுத்தினால் மட்டுமே குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கமுடியும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கந்துவட்டி கொடுமையால் விவசாயி உயிரிழப்பு!

Vandhana

பதவி என்பது கிரிமினல் குற்றங்களில் இருந்து தப்பிப்பதற்கு அல்ல: உச்ச நீதிமன்றம் சாடல்

Gayathri Venkatesan

சர்வதேச மகளிர் தினம்; சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள் நிறுவனம்

Jayasheeba