‘ரேசன் கடைகளிலும் இனி ஆவின் பொருட்கள் விற்பனை’ – அமைச்சர் நாசர்

ரேசன் கடைகளிலும் இனி ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பதிலுரை ஆற்றிய அவர், செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கத்தில் 71 கோடியே 22 லட்சம் ரூபாய்…

ரேசன் கடைகளிலும் இனி ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பதிலுரை ஆற்றிய அவர், செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கத்தில் 71 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பில், நாளொன்றுக்கு, 2 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறனுடைய, பால் பண்ணை அமைக்கப்படும் எனவும்,

கடலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில், நாளொன்றுக்கு 1 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறனுடைய மையம் 30 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அண்மைச் செய்தி: நூல் விலையேற்றம்; கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த அதிமுக, காங்கிரஸ், பாமக உறுப்பினர்கள் 

மேலும், 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற, பால் உற்பத்தியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் எனவும், மாதவரத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் 50 நபர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் எனவும் தெர்வித்தார்.

தொடர்ந்து, பால் உற்பத்தியாளர்களின் அனைத்து வகை இறப்பிற்கும், இறுதி சடங்கிற்கென 5 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் எனவும், அனைத்து ரேசன் கடைகளிலும் ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.