கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பராமரிப்பு உதவித்தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர், இல்லம் தேடி மருத்துவ திட்டம் மூலம் சுமார் 43 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக தெரிவித்தார். “ஒவ்வொரு முறை மழை பாதிப்பு ஏற்படும்போதும் முதல் ஆளாய் களத்தில் இருப்பவர் தான் உங்கள் முதலமைச்சர் என கூறிய அவர், சென்னை பெருநகரில் மழை வெள்ள பாதிப்பை தடுக்க ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என அறிவித்தார்.
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பராமரிப்பு உதவித்தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும், 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி டாலர் என்ற பொருளாதார இலக்கை தமிழ்நாடு அரசு எட்டும் எனவும் முதலமைச்சர் கூறினார்.
திமுகவை சேர்ந்தவர்களே தவறு செய்தாலும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த முதலமைச்சர், கோடிக்கணக்கான ஸ்டாலின்களின் எண்ணங்களை செயல்படுத்தும் அரசு இது எனவும் கூறினார்.








