தமிழ்நாடு முதலமைச்சர் பல்லாண்டு வாழ வேண்டுமென, பள்ளிவாசலில் திமுகவினர் சிறப்பு தொழுகை நடத்தினர்.
திமுக தலைவரும் , தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்
பிறந்தநாள் விழாவை, திமுகவினர் மாநிலம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடி
வருகின்றனர். இதன் ஒருபகுதியாக புதுக்கோட்டை தெற்கு மூன்றாம் வீதியில் உள்ள பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொடர்ந்து திமுக தொண்டர் ஒருவர் குடும்பத்தினருடன் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.
இதேபோல், தமிழ்நாடு முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு நகராட்சியில் பணிபுரியும்
தூய்மைப் பணியாளர்களுக்கு , அசோக் நகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மதிய உணவுகள் வழங்கி, நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில் வழங்கினார்.
—கு.பாலமுருகன்








