முதலமைச்சர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வரச் சிறப்புப் பிரார்த்தனை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு நலம் பெற வேண்டும் என திமுக தொண்டர்கள் கொளஞ்சியப்பர் கோவிலில் சிறப்புப் பிரார்த்தனை மேற்கொண்டனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருள்மிகு கொளஞ்சியப்பர் கோவிலில் பக்தர்கள் தங்கள்…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு நலம் பெற வேண்டும் என திமுக தொண்டர்கள் கொளஞ்சியப்பர் கோவிலில் சிறப்புப் பிரார்த்தனை மேற்கொண்டனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருள்மிகு கொளஞ்சியப்பர் கோவிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை ஒரு வெள்ளைத் தாளில் எழுதி அங்குள்ள வேலில் கட்டி வைத்து வேண்டிக்கொள்வது வழக்கம், அப்படிச் செய்தால் கொளஞ்சியப்பர் பக்தர்களின் கோரிக்கையை நிவர்த்தி செய்வதாக நம்பி பிரார்த்தனை மேற்கொள்கின்றனர். அதன் அடிப்படையில் உலகம் முழுவதும் இருந்து வேண்டுதலுடன் கொளஞ்சியப்பர் கோவிலுக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

அண்மைச் செய்தி: ‘‘அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளுக்குக் காரணம் பாஜக’- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி’

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நோய்த் தொற்றிலிருந்து மீண்டு நலம் பெற வேண்டி விருத்தாசலத்தைச் சேர்ந்த திமுக தொண்டர்கள் இன்று கொளஞ்சியப்பர் கோவிலில் சிறப்புப் பிரார்த்தனை மேற்கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.