தமிழக முதல்வர் பழனிச்சாமி மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் சார்பில் தொடர்ந்த அவதூறு வழக்குகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி பற்றிய மக்களின் மனநிலை குறித்தும், வாக்கி டாக்கி கொள்முதல் விவகாரத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குறித்தும், மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார். அவரது கருத்து, தங்கள் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகக் கூறி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரண்டு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், இரு வழக்குகளிலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மே 6ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.







