சிறப்புக் குழந்தைகள் ஒலிம்பிக் போட்டி : சென்னையைச் சேர்ந்த சிறுமி பூஜா தங்கம் வென்றார்!

சிறப்புக் குழந்தைகள் ஒலிம்பிக் போட்டியில் சென்னையைச் சேர்ந்த சிறுமி பூஜா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சிறப்புக் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான  ஒலிம்பிக் போட்டி  ஜூன் 17ஆம் தேதி தொடங்கி ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில்…

சிறப்புக் குழந்தைகள் ஒலிம்பிக் போட்டியில் சென்னையைச் சேர்ந்த சிறுமி பூஜா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

சிறப்புக் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான  ஒலிம்பிக் போட்டி  ஜூன் 17ஆம் தேதி தொடங்கி ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது. இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 198 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இப்போட்டியில் உலக முழுவதும் இருந்து 190 நாடுகளைச் சேர்ந்த 7,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் 26 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் 25 மீட்டர் நீச்சல் போட்டியில் சென்னையைச் சேர்ந்த பூஜா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

17 வயதான சிறுமி பூஜா ‘டவுன் சின்ட்ரோம் டிரிசோமி 21’ என்ற குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னையில் உள்ள சிறுப்பு குழந்தைகளுக்கான பயிற்சி மையத்தில் 9 வயதிலிருந்தே நீச்சல் பயிற்சி பெற்று வருகிறார்.

ஜெர்மனியில் நடைபெறும்  நீச்சல் போட்டியில் பங்கேற்க, சிறுமி பூஜா, இரண்டு இளைஞர்கள் என மூன்று பேர் கொண்ட அணியினர் சென்றிருந்தனர். சிறுமி பூஜா தங்கப் பதக்கம் , 50 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் பிரெஸ்ட் ஸ்டிரோக் நீச்சல் போட்டி பிரிவில்   22 வயது தினேஷ் வெள்ளிப் பதக்கம்,  18 வயது அப்துல் ரஹ்மான் என்ற இளைஞர் ஃப்ரீ ஸ்டைல் ரிலே நீச்சல் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.