அக்.25 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தகவல்

தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர் சென்ற பொதுமக்கள், மீண்டும் திரும்பும் வகையில் புதன்கிழமை வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறை…

தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர் சென்ற பொதுமக்கள், மீண்டும் திரும்பும் வகையில் புதன்கிழமை வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர் செல்வதற்காக வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக தமிழ்நாட்டில் 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. சென்னை கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி ஆகிய இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சொந்த ஊர் சென்ற பொதுமக்கள் மீண்டும் திரும்பும் வகையில் புதன்கிழமை வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவிப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

இதையும் படியுங்கள் : டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிப்பு – பொதுமக்கள் கடும் அவதி..!

தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து ஏறக்குறைய 5 லட்சம் பயணிகள் சிறப்பு பேருந்துகளில் பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், சென்னை திரும்புவோருக்காக பல்வேறு ஊர்களிலிருந்து 8,000 பேருந்துகள் வரை இயக்கப்படும் என அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.