தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் பெண் செயல் அலுவலரை தாக்கிய புகாரில் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குலசை முத்தாரம்மன் கோயிலில், தசரா திருவிழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் நாளை நடைபெறுகிறது. இதனையொட்டி, சிறுநாடார் குடியிருப்பை சேர்ந்த 600 நபர்கள் கோயிலுக்கு வருகை தந்தனர்.
அவர்களில் 50 பேரை மட்டுமே கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படும் என செயல் அலுவலர் வெங்கடேஸ்வரி கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், செயல் அலுவலரை தாக்கி விட்டு 600 பேரும் உள்ளே சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வெங்கடேஸ்வரி அளித்த புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.







