தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால் இன்றுடன் பேருந்து சேவை நிறுத்தப்படுகிறது. இதனால் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். தமிழகத்தில் முழு ஊரடங்கின்…

தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால் இன்றுடன் பேருந்து சேவை நிறுத்தப்படுகிறது. இதனால் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.

தமிழகத்தில் முழு ஊரடங்கின் காரணமாக இன்று இரவோடு பேருந்து சேவைகள் நிறுத்தப்படுகின்றது. இதனையொட்டி மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கியுள்ளன. பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கையொட்டி மக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக தமிழகம் முழுவதும் 17,195 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

நேற்று மட்டும் சென்னையில் இருந்து 1.33 லட்சம் பயணிகள் வெளி மாவட்டங்களுக்கு பயணித்ததாக கூறப்படுகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த 50% பயணிகளுடன் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என அறிவித்துள்ள நிலையில் சில பேருந்துகள் 100% பயணிகளுடன் இயக்கப்பட்டன. கொரோனா பரவலைத் தடுக்க, மே 10-ம் தேதியிலிருந்து முழு ஊரடங்கு நடைமுறைக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.