தமிழக அரசின் சார்பில் தலைமை வழக்கறிஞராக இருந்து வந்த விஜய் நாராயண் ராஜினாமா செய்ததையடுயத்து, திமுகவின் சட்டப்பிரிவு தலைவர் சண்முகச் சுந்தரம் புதிய தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞராக 1996-2001 வரை பணியில் இருந்தவர் சண்முகச் சுந்தரம். கடந்த 2002 முதல் 2008 வரை மாநிலங்களைவை உறுப்பினராக பணியாற்றியவர். இதனையடுத்து 2015-2017 வரை சென்னை வழக்கறிஞர் சங்க தலைவராக இருந்து வந்தார்.
அதற்கு முன்னர் அரசின் பல்வேறு குற்றவியல் வழக்குகள் மற்றும் குறிப்பாக ராஜிவ்காந்தி கொலை வழக்கு, ஜெயலலிதா சொத்து குவிப்பு போன்ற வழக்குகளில் சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றினார். 1977 முதல் இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.







