மாற்றுத்திறனாளிகள் சுவாமி தரிசனம் செய்யச் சிறப்பு ஏற்பாடு

திருக்கோயில்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் எளிதில் தரிசனம் செய்ய ஏதுவாக சாய்வு தளங்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் அமைக்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ள உத்தரவில்,…

திருக்கோயில்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் எளிதில் தரிசனம் செய்ய ஏதுவாக சாய்வு தளங்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் அமைக்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ள உத்தரவில், 48 முதுநிலை திருக்கோவில்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் எளிதில் தரிசனம் செய்ய ஏதுவாக சாய்வு தளங்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்படும் எனச் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைச் செயல்படுத்தும் வகையில், சாய்வு தளங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கவும், மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்காகச் சக்கர நாற்காலிகள் கொள்முதல் செய்யவும், முதுநிலை திருக்கோயில் அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்தி: ‘ஒற்றைத்தலைமை விவகாரம்; ஓபிஎஸ்க்கு ஆதரவாக போஸ்டர்’

மேலும், என்ன என்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்ற விபரத்தினை பக்தர்கள் அறியும் வகையில் அறிவிப்பு செய்யப்பட வேண்டும் எனவும், திருக்கோவில் நுழைவுவாயில் அருகே குறைந்தபட்சம் 5 சக்கர நாற்காலி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அந்த உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல, திருக்கோவில்களில் இதற்காக ஒரு தனி பணியாளர் பொறுப்பில் இருக்க வேண்டும் எனவும், சக்கர நாற்காலியில் வருபவர்கள் எளிதில் தரிசனம் செய்யும் வகையில் தேவையான இடங்களில் மரப்பலகையிலான சாய்வு தளங்கள் அமைத்திட வேண்டும் எனவும் திருக்கோயில் அலுவலர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.