முக்கியச் செய்திகள்

ஸ்பெயினில் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு 3 நாட்கள் விடுமுறை

ஸ்பெயினில் மாதவிடாய் காலத்தில் பெண் பணியாளர்களுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாதவிடாய் காலத்தின் வலியை இயல்பாக எடுத்துக்கொண்டு தங்களின் அன்றாட பணிகளில் ஈடுபடுவது அனைத்துப் பெண்களுக்கும் பழகிப்போன ஒன்றுதான். இருந்தாலும் அந்த சமயத்தில் விடுமுறை கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைக்கும் பெண்கள்தான் அதிகம். அந்த வகையில் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் மாதத்தில் 3 நாட்கள் விடுமுறையை அறிவிக்கவுள்ளது ஸ்பெயின் நாட்டு அரசு.

மேற்கத்திய நாடுகளில் மாதவிடாய் காலத்தில் பெண் பணியாளர்களுக்கு மாதத்தில் 3 நாட்கள் விடுமுறை அளிக்கும் முதல் நாடு ஸ்பெயின் ஆகும். இந்த விடுமுறை குறித்து அடுத்த வாரம் ஸ்பெயின் நாட்டு அரசு அறிவிக்கவுள்ளதாக தி கெடெனா செர் வானொலி நிலையம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதவிடாய் ஏற்படும் பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கடுமையான வலியால் பாதிக்கப்படுகின்றனர். டிஸ்மெனோரியா என்று அழைக்கப்படும் இந்த வலிக்கான அறிகுறிகளில் வயிற்று வலி, தலைவலி, வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் ஆகியவை அடங்கும் என ஸ்பேனிஸ் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நோயியல் சங்கம் தெரிவித்துள்ளது.

ஸ்பெயின் நாட்டு அரசின் இந்த அறிவிப்பு, வேலைக்குச் செல்லும் பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் ஜிகா வைரஸ் தடுப்பு பணிகள் தீவிரம்

Saravana Kumar

அரசு பள்ளி மாணவி தற்கொலை

Saravana Kumar

தமிழகத்தில் இந்த மாதம் பள்ளிகளை திறப்பது சாத்தியம் இல்லை! – அமைச்சர் செங்கோட்டையன்

Nandhakumar