ஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி SpaceX நிறுவனம் உலக சாதனை படைத்துள்ளது.
பிப்ரவரி 2017ல் இந்திய விண்வெளி நிறுவனம் 104 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி உலக சாதனை படைத்திருந்தது. அந்த வரிசையில் எலான் மஸ்கின் SpaceX நிறுவனம் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் 143 செயற்கைக்கோள்களை அனுப்பி அந்த சாதனையை முறியடித்துள்ளது. இது அமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் வணிகரீதியான செயற்கைக்கோள் உள்பட பல செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டன. இதனிடையே, Space X நிறுவனம் 2021ல் உலகளாவிய பிராட்பேண்ட் இணையத்தை வழங்கும் நோக்கத்தை கொண்டுள்ளது. ஒவ்வொரு செயற்கைக்கோளையும் விண்வெளியில் வெற்றிகரமாக நிலைநிறுத்துவதற்கு 15,000 டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.11 லட்சம்) மட்டுமே செலவழித்ததாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிறுவனம் விண்வெளி துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.