தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒரு மாதத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று, தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
11வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, சென்னை கலைவாணர் அரங்கத்தில், தேர்தல் ஆணையம் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக தலைமை செயலாளர் சண்முகம், தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் தேர்தல் தொடர்பான உறுதிமொழியை அனைவரும் எடுத்துக்கொண்டனர்.
நிகழ்ச்சிக்குப்பின், செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, வாக்குப்பதிவுக்கு தேவையான மின்னணு இயந்திரங்கள் இன்னும் ஒரு மாதத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றார்.







