முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பயணிகள் வருகை குறைவு: ஜூன் 16 வரை மேலும் சில ரயில்கள் ரத்து!

பயணிகளின் போதுமான ஆதரவின்மை காரணமாக மேலும் சில ரயில்களை ஜூன் 16 வரை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பயணிகளின் போதிய ஆதரவின்மை காரணமாக சில ரயில்கள் ஜூன் 1 வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த ரயில்களின் சேவை மேலும் 15 நாட்களுக்கு ரத்து நீட்டிப்பு செய்யப்படுகிறது.

மே 31 வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தாம்பரம் – நாகர்கோயில் (வண்டி எண் 06191 ) சிறப்பு ரயில் ஜூன் 15 வரை ரத்து செய்யப்படுகிறது. அதேபோல ஜூன் 1 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நாகர்கோவில் – தாம்பரம் (வண்டி எண் 06192) சிறப்பு ரயில் ஜூன் 16 வரை ரத்து செய்யப்படுகிறது,

ஜூன் 31 வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த திருநெல்வேலி – பாலக்காடு (வண்டி எண் 06791) சிறப்பு ரயில் ஜூன் 15 வரை ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல ஜூன் 1 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பாலக்காடு – திருநெல்வேலி (வண்டி எண் 06792 ) சிறப்பு ரயில் ஜூன் 16 வரை ரத்து செய்யப்படுகிறது. மேலும் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – மங்களூரு, கொச்சுவேலி – மைசூரு, திருவனந்தபுரம் – மங்களூரு, டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – மேட்டுப்பாளையம் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களின் சேவை ஜூன் 16 வரை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!

Ezhilarasan

தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு!

Nandhakumar

கர்ப்பிணி மனைவியை கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை: தேனி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Saravana