முக்கியச் செய்திகள் தமிழகம்

தென் மாவட்டங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள்: அமைச்சர்

தென்மாவட்டங்களில் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 

தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை போன்ற தென்மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உள்ளிட்டவற்றை கொண்டு வர திட்டம் உள்ளது” என்று தெரிவித்தார். 

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மதுரையை மையமாக கொண்டு தொழில் சார்ந்த வல்லுநர்கள், நிறுவனங்களை உள்ளடக்கிய Forum அமைத்து,  தொழில் சாத்தியக் கூறுகள் தொடர்பாக தொடர்ந்து விவாதித்து தொழிற்கொள்கை உருவாக்கவும் திட்டம் கொண்டுவரப்பட உள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், சென்னையில் அதிக முதலீட்டில் தொழில் துவங்க அளிக்கப்படும் சலுகைகள், தென் மாவட்டங்களில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கும்  வழங்கப்படவுள்ளது என்று கூறினார். 

மேலும், “கடந்த இரண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பாக தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜூலை 15 ஆம் தேதிக்கு பிறகு புதிய தொழில் முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்படும்” என்றார். மேலும்,  நாளை முதல் தொல்லியல் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் கீழடி, சிவகளை, ஆதிச்சநல்லூர், கங்கை கொண்ட சோழபுரம் உள்ளிட்ட இடங்களில் நேரில் ஆய்வு செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விமான பயணிகள் பாதுகாப்பு கட்டணம் உயர்வு!

எல்.ரேணுகாதேவி

என்.எல்.சி விவகாரத்தில் ராணுவமே வந்தாலும் நிலத்தை கொடுக்கமாட்டோம் – அன்புமணி ராமதாஸ்

Yuthi

எட்டு வழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படாது: திமுக அறிக்கையில் இடம்பெற்ற திருத்தங்கள்!

Gayathri Venkatesan