பட்டியலின ஊராட்சித் தலைவர்கள் தொடர்பான வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு!

தமிழ்நாட்டில் பட்டியலின ஊராட்சித் தலைவர்களின் உரிமைகள் மறுக்கப்படுவது தொடர்பாக, நான்கு வாரங்களில் பதிலளிக்க, தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்கறிஞர் ராஜகுரு என்பவர் தாக்கல் செய்த மனுவில், பட்டியலின ஊராட்சித் தலைவர்கள்,…

தமிழ்நாட்டில் பட்டியலின ஊராட்சித் தலைவர்களின் உரிமைகள் மறுக்கப்படுவது தொடர்பாக, நான்கு வாரங்களில் பதிலளிக்க, தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக வழக்கறிஞர் ராஜகுரு என்பவர் தாக்கல் செய்த மனுவில், பட்டியலின ஊராட்சித் தலைவர்கள், சுதந்திர தினம் உள்ளிட்ட அரசு நிகழ்ச்சிகளில், தேசிய கொடி ஏற்ற அனுமதி மறுக்கப்படுவதாகவும், இருக்கைகளில் அமரவிடாமல் இழிவாக நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆவணங்களை கையாள விடாமல் தடுக்கப்படுவதாகவும், பிற சமூகங்களைச் சேர்ந்த துணைத் தலைவர்களால் மிரட்டப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு முழுவதும் பஞ்சாயத்து அலுவலகங்களில், சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவிடக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.