பாஜக மாநிலங்களவை குழு தலைவராக பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் நேற்று சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. முன்னதாக மத்திய அமைச்சரவையானது கடந்த 7ம் தேதி மாற்றியமைக்கப்பட்டது. 43 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவையாக இது விரிவாக்கப்பட்டது. புதிதாக கூட்டுறவுக்கு என துறையும் உருவாக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடி தலைமையிலான அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. புதிதாக ஸ்மிருதி இராணி மற்றும் பூபேந்தர் யாதவர் ஆகியோர் இணைக்கப்பட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், பாதுகாப்புத்துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில், வீரேந்திர குமார், கிரண்ரிஜுஜூ மற்றும் அனுராக் தாக்கூர் ஆகியோர் புதிதாக இணைக்கப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக பாஜக மாநிலங்களவை குழு தலைவராக பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக பாஜக மாநிலங்களவை குழு தலைவராக இருந்த தாவர்சந்த் கெலாட் கர்நாடக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.