30 வருடத்திற்கு முன் இறந்தவர்களுக்குத் திருமணம் செய்து வைத்து, மீன் வறுவல், சிக்கன் கிரேவியுடன் விருந்து நடைபெற்றுள்ளது.
கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சில சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் ஆத்மா திருமணத்தை ஒரு சடங்காகப் பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில், தட்சினா கன்னடா மாவட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன இரு குழந்தைகளுக்கு ஆத்மா திருமணம் நடைபெற்றுள்ளது. சிறிய வயதிலோ அல்லது இளமைக் காலத்திலோ அல்லது திருமணம் செய்யாமல் இறந்துவிட்டால் அவர்களுக்கு இது போன்ற திருமணம் நடத்தப்படுவதை அந்த சமுதாய மக்கள் பின்பற்றி வருகின்றனர்.
அண்மைச் செய்தி: ‘பிரதமர் உரையை நரிக்குறவ மக்களுடன் இணைந்து கேட்ட அண்ணாமலை’
நிஜ திருமணம் எப்படி நடைபெறுகிறதோ, அதுபோலவே இந்த அப்படியேதான் ஆத்மா திருமணங்களும் நடைபெறுகின்றது. இரண்டு இருக்கைகள் போடப்பட்டு அதில் மணமகன், மணமகளின் துணிமணிகளை வைத்து சில திருமண சடங்குகள் செய்யப்படுகின்றன. இந்த திருமணத்தில் போடப்பட்ட இருக்கைகளை, மணமகள் மற்றும் மணமகன் உறவினர்கள், அவர்களது ஆடைகளுடன் 7 முறை சுற்றி வருகின்றனர்.
https://twitter.com/anny_arun/status/1552695899134251008
இந்த ஆத்மா திருமண விருந்தில் மீன் வறுவல், சிக்கன் சுக்கா, மட்டன் கிரேவி, இட்லி உள்ளிட்டவை பரிமாறப்பட்டுள்ளன. இந்த காணொளியை, அருண் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ஜூலை 28 அன்று இந்த திருமணத்தில் கலந்து கொண்டதாகவும், ஒரு வித்தியாசமான காரணத்திற்காக அதைப் பற்றி எழுதுவதாகவும் கூறியுள்ளார்.








