டெல்லி காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட தமிழ்நாடு அதிகாரி

தமிழ்நாடு காவல்துறை கேடரை சேர்ந்த சஞ்சய் அரோராவை டெல்லி காவல்துறை ஆணையராக நியமனம் செய்து மத்திய உள்துறை அறிவித்துள்ளது.   தமிழ்நாடு கேடரைச் சேர்ந்த சஞ்சய் அரோரா ஐபிஎஸ், சிஆர்பிஎப் சிறப்பு இயக்குநர் ஜெனரலாக…

தமிழ்நாடு காவல்துறை கேடரை சேர்ந்த சஞ்சய் அரோராவை டெல்லி காவல்துறை ஆணையராக நியமனம் செய்து மத்திய உள்துறை அறிவித்துள்ளது.

 

தமிழ்நாடு கேடரைச் சேர்ந்த சஞ்சய் அரோரா ஐபிஎஸ், சிஆர்பிஎப் சிறப்பு இயக்குநர் ஜெனரலாக மத்திய ரிசர்வ் போலீசில் பணியாற்றி வருகிறார். மேலும் அவர், இந்தோ-திபெத்தியன் எல்லை போலீஸ் டிஜிபியாகவும் நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வந்தார்.

 

இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப்படை தலைவர் எஸ்.எஸ்.தேஸ்வால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி பணி ஓய்வு பெற்றதால், சஞ்சய் அரோரா ஐபிஎஸ் அந்த பதவிக்கு, நியமனம் செய்யப்பட்டார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சய் அரோரா, 1988ம் ஆண்டு பேட்ஜ் அதிகாரியாக தனது பணியை திறம்பட செய்து வருகிறார். மேலும் தமிழ்நாடு காவல்துறை கேடரிலும் சஞ்சய் அரோரா பணியாற்றி வந்த நிலையில், அவர் டெல்லி காவல் ஆணையராக தற்போது பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

டிஜிபி அந்தஸ்தில் உள்ள சஞ்சய் அரோரா, மத்திய அரசு பணிக்கு மாறுவதோடு, அவரை டெல்லி காவல் ஆணையராக அறிவித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.