ஆடி அமாவாசை முன்னிட்டு சொரிமுத்து அய்யனார் கோயிலில் குடில் அமைத்து தங்கி பக்தர்கள் தரிசனம்!

காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா முன்னிட்டு திருநெல்வேலி மாநகர ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி நேரில் ஆய்வு மேற்கொண்டு பக்தர்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் மேற்கு தொடர்ச்சி…

காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா முன்னிட்டு திருநெல்வேலி மாநகர ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி நேரில் ஆய்வு மேற்கொண்டு பக்தர்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள பிரசித்தி பெற்ற
காரையார் சொரி முத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா கடந்த 6 ஆம் தேதி கால்நாட்டுடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குடில்கள் அமைத்து அங்கேயே தங்கி சாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம், இன்று முதல் 18 ஆம் தேதி வரை கோயிலில் பக்தர்கள் தங்க அனுமதி வழங்கியது. மேலும், அன்றைய தினங்களில் பக்தர்கள் அரசு பேருந்துகளில் மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதிப்படுவார்கள். இதனால் பக்தர்கள் தங்குவதற்கு தேவையான உடைமைகள் இன்று மாலை 5 மணி வரை எடுத்து செல்லலாம் என அனுமதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டது.

நெல்லை மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்திக்கு இந்த விழா ஒருங்கிணைப்பு பணிகளை கவனிக்க பொறுப்பு அளித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்
உத்தரவிட்டார். இதை அடுத்து இன்று காலை சொரி முத்து அய்யனார் கோயிலில் நடைபெற்ற ஆடி அமாவாசை திருவிழா பணிகளை கூடுதல் பொறுப்பு அதிகாரி
சிவ கிருஷ்ணமூர்த்தி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அடிப்படை வசதிகளை குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு,  பக்தர்களிடம்
குறைகளை கேட்டு அறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று
தெரிவித்தார்

ம. ஸ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.