விரைவில் சூர்யவம்சம் 2 – சர்ப்ரைஸ் கொடுத்த சரத்குமார்!

சூர்யவம்சம் திரைப்படத்தை வெற்றிபெற வைத்து ஆதரவளித்தவர்களுக்கு நன்றி, விரைவில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என நடிகர் சரத்குமார் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். கடந்த 1997-ம் ஆண்டு ஜூன் 27-ம் தேதி நடிகர் சரத்குமார் நடிப்பில்…

சூர்யவம்சம் திரைப்படத்தை வெற்றிபெற வைத்து ஆதரவளித்தவர்களுக்கு நன்றி, விரைவில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என நடிகர் சரத்குமார் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

கடந்த 1997-ம் ஆண்டு ஜூன் 27-ம் தேதி நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘சூர்யவம்சம்’. இந்த படத்தை விக்ரமன் இயக்கியிருந்தார். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது. தேவயானி, ராதிகா, மணிவண்ணன், ஆனந்த்ராஜ், ப்ரியா ராமன், சத்யபிரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தப் படம் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு பெரும் வெற்றிபெற்றது. நகைச்சுவை, குடும்ப உறவுகள் என இந்தப் படம் 90களின் குழந்தைகளுக்கு விருப்பமான படமாக இன்றும் இருந்து வருகிறது. இந்த படத்தின் டெம்ப்ளேட்கள் இன்றும் அதிக அளவில் உபயோகப்பட்டு வருகின்றன. எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்திருந்த இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட்டானது. குறிப்பாக’நட்சத்திர ஜன்னலில்’ பாடல் ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கும் பாடலாக இன்றைக்கும் உள்ளது.

https://twitter.com/realsarathkumar/status/1673666273689980937?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1673666273689980937%7Ctwgr%5E8da97dd53d06409af9e47d81936ffaef07a8fdc2%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dinamani.com%2Fcinema%2Fcinema-news%2F2023%2Fjun%2F28%2Fsuryavamsam-2-coming-soon-sarathkumar-tweet-4028861.html

இந்த படம் வெளியாகி 26 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில், நடிகர் சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் “கலைத்துறை பயணத்தில், காலங்கள் கடந்தும், தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தும், இன்றளவும் அனைத்து தரப்பு ரசிகர்களின் சிந்தையிலும் நீங்காமல் நிறைந்திருந்து கொண்டாடக்கூடிய சிறப்பு வாய்ந்த குடும்பத் திரைப்படம் சூர்யவம்சம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள். கதாபாத்திரங்கள், வசனங்கள், பாடல்கள் என ஒட்டுமொத்த திரைப்படத்தையும் ரசித்து, மாபெரும் வெற்றியளித்து, ஆதரவளித்த அன்பர்களுக்கு நன்றி! விரைவில் சூர்யவம்சம் – 2” என பகிர்ந்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.