திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தர்ஹாவில் தொழுகைக்கு தடை விதிக்க முடியாது: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை!

திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சிக்கந்தர் தர்ஹாவில் தொழுகைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை  மறுத்துவிட்டது.  மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மீது சிக்கந்தர் தர்ஹா அமைந்துள்ளது. இங்கு…

திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சிக்கந்தர் தர்ஹாவில் தொழுகைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை  மறுத்துவிட்டது. 

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மீது சிக்கந்தர் தர்ஹா அமைந்துள்ளது. இங்கு தொழுகை நடத்த தடை விதிக்க வேண்டும் என திருப்பரங்குன்றத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நாளை பக்ரீத் பண்டிகை என்பதால் தொழுகை நடத்த இடைக்கால தடை விதிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். மலைக்கு மேல் தானே தர்ஹாவும் அமைந்துள்ளது, அரை மணி நேரம் தொழுகை நடத்துவதால் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுவிடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.