ஃபர்ஹானா திரைப்படம் ஜூலை 7ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காக்கா முட்டை, ரம்மி, கனா, வடசென்னை உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். வடசென்னை வெற்றிக்குப் பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்துவருகிறார்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த தி கிரேட் இந்தியன் கிச்சன், சொப்பன சுந்தரி, டிரைவர் ஜமுனா ஆகிய படங்கள் வணிகரீதியாக பெரியளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், ஐஸ்வர்யா ராஜேஷ்ன் நடிப்பிற்கு பேர் வாங்கி தந்தது.
இதை தொடர்ந்து நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஃபர்ஹானா திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல்ரீதியாக வெற்றிப்படமாக அமைந்தது. இதில் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், அனுமோல், ஐஸ்வர்யா தத்தா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இந்நிலையில், வருகிற ஜூலை 7 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் ஃபர்ஹானா திரைப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.







