தமிழர்கள் எங்கு இருந்தாலும் அவர்களை காப்பாற்றும் இயக்கம்தான் திமுக என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற, நாதஸ்வர சக்கரவர்த்தி திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் இல்ல திருமண விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேடையிலேயே மனைவி துர்கா ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.
திருமண நிகழ்ச்சியில் தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உக்ரைனில் சிக்கியிருந்த தமிழ்நாட்டு மாணவர்கள் அனைவரும் மீட்கப்பட்டதன் மூலம், மாணவர்களை மீட்டதில் நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார். உக்ரைனில் சிக்கியிருந்த தமிழ்நாட்டு மாணவர்களை மீட்கும் பணியை சிறப்பாக செய்த திமுக எம்.பி திருச்சி சிவா தலைமையிலான குழுவினரை பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழர்கள் எங்கு இருந்தாலும் அவர்களை காப்பாற்றும் இயக்கம்தான் திராவிட முன்னேற்ற கழகம் என்று கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.









